Homeஅரசியல்தியான் சுவாவிற்கு என்ஜிஒ தலைவர்கள் ஆதரவு

தியான் சுவாவிற்கு என்ஜிஒ தலைவர்கள் ஆதரவு

கோலாலம்பூர், நவ.8–
15ஆவது பொதுத் தேர்தலில்  பத்து நாடாளுமன்றத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் மக்கள் நீதிக் கட்சியின் முன்னாள் உதவி தலைவர் தியான் சுவாவின் நடவடிக்கைகளுக்கு என்ஜிஒ தலைவர்கள்  மற்றும் பிகேஆர் உறுப்பினர்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த முன்னாள் பிகேஆர் உதவி தலைவர் நாடாளுமன்றத் தொகுதியில் தங்களுக்கு மீண்டும் சேவை செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, பத்து நாடாளுமன்றத்தில் மீண்டும் போட்டியிடும் இவரின் முடிவை பிகேஆர் உறுப்பினர்கள் வரவேற்கின்றனர்.

என்ஜிஓ தலைவரும், பிகேஆரின் உறுப்பினரும், செயலாளருமான டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன் கூறுகையில், தியான் சுவாவின் முந்தைய போராட்டம் மக்களின் உற்சாகத்தை அதிகரிப்பதிலும் சீர்திருத்த அலையை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

அவரைப் பொறுத்தவரை, 1999 இல் தேசிய நீதிக்கட்சி நிறுவப்படுவதற்கு வழிவகுத்த காரணிகளில் மக்களின் மறுமலர்ச்சி   சிந்தனையும் ஒன்றாகும். மேலும் கட்சியஉருவாக்குவதற்கும் நிறுவுவதற்கும் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவராக தியான் சுவா திகழ்ந்தார்.

90களின் பிற்பகுதியில் மறுமலர்ச்சி இயக்க பிரமுகர்களில் ஒருவராக இருந்த தியான் சுவா, பிகேஆரின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவராகவும், 2010 முதல் பிகேஆர் உதவித் தலைவராகவும், 2008 முதல் பத்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

“14ஆவது பொதுத் தேர்தலில்  (2018)  தியான் சுவா போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியதைத் தொடர்ந்து அவர் அத்தேர்தலில் போட்டியிடவில்லை.

அவர் போட்டியிடாவிட்டாலும், பிரபாகரனை மக்கள் பிரதிநிதியாக நியமித்து, பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளரை ஆதரித்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.

பிரபாகரன் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவரின் வெற்றிக்குப் பின்னால் தியான் சுவாவின் மிகப்பெரிய பங்களிப்பு இருந்ததை யாரும் மறுக்க முடியாது என்பதை கே.செல்வேந்திரன் சுட்டிக் காட்டினார்.

இந்த 15ஆவது பொதுத் தேர்தலில் தியான் சுவா மீண்டும் இத்தொகுதிக்கு பரிந்துரைக்கப்படாததால் பத்து மக்கள் ஏமாற்றமும் சோகமும் அடைந்தனர். மாறாக,  பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளராக பிரபாகரனை கட்சி தக்க வைத்துக் கொண்டது.

“பத்து நாடாளுமன்ற வாக்காளர்கள் தியான் சுவாவின் சேவைகளை அங்கீகரித்து நினைவுகூருகிறார்கள். மேலும் அவர் இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாலும்  அவரைத்  தொடர்ந்து ஆதரிப்பார்கள்” என்றார் செல்வேந்திரன்.

தியான் சுவா இரண்டு முறை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை  வகித்தார் . தகுதி நிபந்தனை காரணமாக 2018 இல் போட்டியிட முடியாததால் 14 ஆவது பொதுத் தேர்தலில்  இளைய வேட்பாளரான பி பிரபாகரனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று எஸ்எம்கே செந்தூல் உத்தாமாவின் திவான் ஜெமிலாங்கில் வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரபாகரனை அப்போது அவருக்குத் தெரியாது என்றாலும் அவர் அளித்த வாக்குறுதி மற்றும் அவர் மீதான நம்பிக்கை அடிப்படையில் 2018 இல் வாக்காளர்கள் பிரபாகரனுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறினார்.

எவ்வாறாயினும், 15 ஆவது பொதுத் தேர்தலில்  சுயேச்சை வேட்பாளராகத் தான் போட்டியிடுவது வாக்கைப் பிரித்து, அப்பகுதியில் உள்ள இடத்தைப் பாதுகாப்பதில் தலையிடுவதாக பக்காத்தானால் கூறப்பட்ட குற்றச்சாட்டை தியான் சுவா நிராகரித்தார்.  இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற வாக்காளர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே  தான் இங்கு களம் இறங்கியதாக அவர் விவரித்தார்.

தனது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுயேச்சை வேட்பாளராக இத்தேர்தலில் களமிறங்கும் தியான் சுவா நாற்காலி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதனிடையே, மக்களின் நாடி நரம்பை அறிந்து அவர்கள் படும் இன்னல்களைத் தீர்ப்பதில் அக்கறை
காட்டும் பிரதிநிதி நமக்குத் தேவை. இந்தத் தகுதியைக் கொண்ட தியான் சுவாவிற்கு இத்தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி இத்தொகுதி வாக்காளர்களை செல்வேந்திரன் கேட்டுக் கொண்டார். 

spot_img

latest articles

explore more