Homeஅரசியல்பெர்சத்து கட்சியின் கணக்கு இரு வாரங்களுக்கு முன்பு முடக்கம்

பெர்சத்து கட்சியின் கணக்கு இரு வாரங்களுக்கு முன்பு முடக்கம்

பெட்டாலிங் ஜெயா,பிப்.1–

பெர்சத்து கட்சியின் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு இரு வாரங்கள் ஆவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் எஸ்பிஆர்எம் புலன் விசாரணையைத் தொடர்வதோடு புலன் விசாரணைக்கு உதவ சாட்சிகள் அழைக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.

“இது குறித்து நான் மேல் விவரம் எதுவும் கூற முடியாது. பொறுமை காக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று எஃப்எம்டியிடம் அவர் தெரிவித்தார்.

டான்ஸ்ரீ முகைதீன் யாசினைத் தலைவராகக் கொண்ட பெர்சத்து கட்சியின் கணக்கு சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு,, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியுதவி தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் வழி கிடைக்கும் வருமான தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்பிஆர்எம் முடக்கியதாக அக்கட்சி வட்டாரம் உறுதிப்படுத்தியது.

Top of Form

spot_img

latest articles

explore more