Homeசமூகம்தனி மனிதனின் வெற்றி,தோல்வியை நிர்ணயிப்பது பட்டங்கள் அல்ல!-முகமது சாபு

தனி மனிதனின் வெற்றி,தோல்வியை நிர்ணயிப்பது பட்டங்கள் அல்ல!-முகமது சாபு

கோலாலம்பூர், பிப்.2-

ஒரு தனி மனிதனின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது அவன் பெற்ற பட்டங்கள் அல்ல என்கிறார் டத்தோஸ்ரீ முகமது சாபு.

சம்பந்தப்பட்ட நபரின் உயரிய செயல்களே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிக்கும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சரான அவர் விவரித்தார்.

“மலாய்க்காரர்கள் பெரிய பெரிய பட்டங்களைக் கொண்டவர்களையே மதிப்பர் என்று நண்பர் ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார்” என்றார் முகமது சாபு.

“அரசியலிலும், தேர்தல்களிலும் துன், டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ மற்றும் டத்தோ போன்ற பட்டங்களைக் கொண்டவர்களை சாதாரண நபர்கள் தோற்கடித்தது உண்டு”.

ஆகையால், ஒரு மனிதர் மதிக்கப்படுவது அவர் பெற்ற பட்டம் கிடையாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பிப்ரவரி 1ஆம் தேதி கூட்டரசு தினத்தையொட்டி விருது பெற்றவர்களின் பட்டியலில் அமானா கட்சித் தலைவரான முகமது சாபு முதலிடம் வகித்தார். இவர் டத்தோஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more