பெட்டாலிங் ஜெயா, பிப்.15-
மக்களுக்கான சுகாதார சேவை ஏற்புடைய கட்டணத்திலும் எளிதாகப் பெறும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற தனது கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிக்ஷாகரன் புதிய திட்டத்தில் இறங்கியுள்ளார்.
இவ்வட்டார மக்கள் மிகக் குறைந்த கட்டணமான 15 வெள்ளியில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்காக டாக்டர் எனிவே மலேசியா எனும் இலக்கவியல் சேவை நிறுவனத்துடன் இணைந்து புக்கிட் காசிங் சட்டமன்ற அலுவலகம் பணியாற்றவிருக்கிறது.
அதே வேளையில், பி40 மக்கள் 5 வெள்ளியில் இச்சேவையைப் பெறலாம் என்று டாக்டர் எனிவே மலேசியா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எட்வர்ட் லிங்குடன் இணைந்து இத்திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் ரஜீவ் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
இவ்விரு தரப்புகளின் கூட்டு முயற்சியின் வாயிலாக இவ்வட்டார மக்கள் இணையம் வழி சில நிமிடங்களிலேயே மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். மருந்து ஒரு மணி நேரத்தில் இவர்களின் வீடு தேடி வரும் என்றும் கூறப்படுகிறது.
இச்சேவையைப் பெற https://doctoranywhere.page.link/MY-download-link எனும் அகப்பக்கத்தை இன்றே பதிவேற்றம் செய்யும்படி புக்கிட் காசிங் வட்டார மக்களை ரஜீவ் கேட்டுக் கொண்டார்.
புக்கிட் காசிங் வாக்காளர்கள் தங்கள் அடையாளக் கார்டைக் கொண்டு பதியும்போது 15 வெள்ளி சிறப்பு ஆலோசனை கட்டணைத்தையும் காணலாம்.
அதே சமயம், பி 40 பிரிவினர் https://dranywhr.my/bghealth-form வழி தங்களைப் பதிந்து கொள்ளலாம். பி40 கட்டணத்திற்குத் தகுதி பெறும் குடியிருப்பாளர்களுக்கான கட்டணம் குறித்து 7 நாட்களில் தெரிந்துவிடும்.
இச்சேவை குறித்த மேல் விவரங்களுக்கு doctoranywhere.my/bukitgasinghealth


