Homeசமூகம்பிரிக்பீல்ட்ஸில் 12 கடைகள் உடைபடும் அபாயம்! ஓய்.டி.எல். நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! -அமைச்சர் சிவக்குமார்

பிரிக்பீல்ட்ஸில் 12 கடைகள் உடைபடும் அபாயம்! ஓய்.டி.எல். நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! -அமைச்சர் சிவக்குமார்

கோலாலம்பூர், பிப். 16-
தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 12 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் அங்காடி கடைகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதால்  இது தொடர்பில் ஓய்டிஎல். நிறுவனத்திடம்  விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

இந்தக் கடைகள் அகற்றப்பட்டால் காலங்காலமாக இங்கு வியாபாரம் செய்து வரும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

இந்த வியாபாரிகள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண  சம்பந்தப்பட்ட ஓய்டிஎல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று  அமைச்சர் குறிப்பிட்டார் .

இப்பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அவர் கூறினார்.

அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மீரா கட்சியின் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் ஆகியோர் இந்த பிரச்சனையை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தங்களுக்கு உதவும்படி இப்பகுதியில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் இந்திய அங்காடி வியாபாரிகள்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்குக் கோரிக்கை விடுக்கும் வகையில் பதாகையை வைத்துள்ளனர்.

spot_img

latest articles

explore more