கோலாலம்பூர், பிப். 24-
விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில் தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி உதவி தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருக்கிறார்.
நடப்பு உதவித் தலைவர்களான டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் மற்றும் டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட்டையடுத்து இப்பதவிக்குப் போட்டியிடும் மூன்றாவது நபராக ஜோஹாரி திகழ்கிறார்.
முன்னாள் இரண்டாவது நிதியமைச்சரான ஜோஹாரி அம்னோ தலைமையகத்தில் இன்று காலையில் வேட்பாளர் பாரத்தைச் சமர்ப்பித்ததாக உத்துசான் மலேசியாவை மேற்கோள் காட்டி ஃபிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டது.
ஜோஹாரியைத் தவிர்த்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கானும் உதவி தலைவருக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பு உதவித் தலைவர்களான டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் மற்றும் டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட்டை எதிர்த்து இவர்கள் போட்டியிடவிருக்கின்றனர்.
அம்னோவின் மற்றொரு உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப். தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் இதுவரை கருத்துரைக்கவில்லை.


