Homeசமூகம்டத்தோ ஜோ சரவணனுக்கு உலகளாவிய வணிக தலைமைத்துவ துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது!

டத்தோ ஜோ சரவணனுக்கு உலகளாவிய வணிக தலைமைத்துவ துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது!

கோலாலம்பூர், பிப். 24-
மலேசிய மறுசுழற்சி சங்கத்தின் தேசியத் தலைவர்
டத்தோ ஜோ சரவணன் உலகளாவிய வணிக ‘ICON’ தலைமைத்துவ துறையில்
வாழ்நாள்
சாதனையாளர் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பல்வேறு வணிகத் துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் சாதனை படைத்த தொழில் வணிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா தலைதகரில் கோலாகலமாக நடைபெற்றது.

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ படிலா யூசோப் தலைமையில் பலருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

இங்குள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவில் இந்திய சமுதாயத்தின் சார்பில் மலேசிய மறுசுழற்சி சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஜோ சரவணனுக்கு மட்டுமே இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிள்ளான் மாவட்ட செம்பிறைச் சங்கத்தின் தலைவராக இருக்கும் டத்தோ ஜோ சரவணன் ஏழை எளிய மக்களுக்கும் உதவிகள் தேவைப்படுவோருக்கும் பல வகைகளில் உதவிகள் புரிந்து வருகிறார்.

‘Paka’ மெட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான டத்தோ ஜோ சரவணன் இந்திய சமுதாயத்திலும் தலைசிறந்த மக்கள் சேவையாளராக வலம் வருகிறார்.

நோய்த் தொற்று காலத்தில் கஷ்டப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டினார்.

மேலும் ஷா ஆலமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி புரிந்தார்.

நாட்டிற்கும் இந்திய சமுதாயத்துக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காக டத்தோ ஜோ சரவணனுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more