Homeசமூகம்மனித வள அமைச்சர் சிவகுமார் - டான்ஸ்ரீ நடராஜா சந்திப்பு

மனித வள அமைச்சர் சிவகுமார் – டான்ஸ்ரீ நடராஜா சந்திப்பு

புத்ராஜெயா, பிப். 28-

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா நேற்று மனித வள அமைச்சர் வ சிவகுமாரை  சந்தித்து பேசினார்.

மனித வள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், செயலாளர் சேதுபதி மற்றும் பாலகுரு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து சிறப்பித்த மனித வள அமைச்சருக்கு இவ்வேளையில் டான்ஸ்ரீ டாக்டர் நடராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிப்பட்ட  செயலாளர் மகேஸ்வரி மற்றும் டி. கண்ணன் ஆகியோரும்  உடன் இருந்தனர்.

spot_img

latest articles

explore more