புத்ரா ஜெயா செப் 29-
சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ )மறுவாழ்வு மையத்தின் வாயிலாக இவ்வாண்டு 2,150 தொழிலாளர்கள் நன்மை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சொக்சோ மறுவாழ்வு மையம் என்பது மருத்துவ மற்றும் தொழில்சார் மறுவாழ்வு சிகிச்சையை ஒருங்கிணைக்கும் ஒரு சர்வதேச தரநிலை மறுவாழ்வு மையமாகும்.
இந்த மறுவாழ்வு மையம் தூய நோக்கங்களுடன் அமைக்கப்பட்டது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
சொக்சோ மறுவாழ்வு மையம் ஊனமுற்றோர் மற்றும் நோயாளிகளுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டில் இதுவரை 2,150 தொழிலாளர்கள் சொக்சோ
மறுவாழ்வு சிகிட்சை பெற்றுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.




