spot_img
14.2 C
London
spot_img
Home சமூகம் நுழைவு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும்! -பிரதமர்

நுழைவு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும்! -பிரதமர்

0
204

கோலாலம்பூர், அக்.14-

அடுத்த ஆண்டு தொடங்கி பொது பல்கலைக்கழக் நுழைவு கட்டணம் 1,500 வெள்ளியைத் தாண்டக் கூடாது. அதே சமயம், இக்கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்கள்  பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக் கழக நுழைவு கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவதைத் தான் காண விரும்பவில்லை” என்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்.

பாடங்களுக்கான பதிவு தொடங்கிய பின்னர் கட்டணத்தைச் செலுத்தலாம். மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்வது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.