spot_img
14.9 C
London
spot_img
Home சமூகம் தொழில் திறன் வாய்ப்பு: நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளும்படி இந்திய மாணவர்களுக்கு அமைச்சர் சிவகுமார்...

தொழில் திறன் வாய்ப்பு: நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளும்படி இந்திய மாணவர்களுக்கு அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

0
215

புத்ரா ஜெயா அக் 24-
சிறந்த மனித மூலதனத்தை உருவாக்கும் தளமாக திவேட் தொழில் திறன் கல்வி விளங்குகிறது.

மனிதவள அமைச்சின் கீழ் இந்த தொழில் திறன் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

திவேட் தொழில் திறன் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருதாமல் இதைப் பயில இந்திய மாணவர்கள் அதிக அளவில் முன் வரும்படி அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

திவேட் தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார் அவர்.

இதனிடையே, ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்கான திவேட் தொழில் திறன் படிப்புக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 2023 வரை திறந்திருக்கும்.

விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள் https://mohon.tvet.gov.my/ அகப்பக்கத்தை அணுகலாம் என்றார் அவர் .