spot_img
12.6 C
London
spot_img
Home சமூகம் தீபாவளித் திருநாளில் வசதி குறைந்தவர்களை மனதில் கொள்வோம் -டாக்டர் குணராஜ்

தீபாவளித் திருநாளில் வசதி குறைந்தவர்களை மனதில் கொள்வோம் -டாக்டர் குணராஜ்

0
181

கிள்ளான், நவ.8-

இந்த தீபாவளித் திருநாளை முன்னிட்டு வசதி குறைந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் நம்பிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.


அவர்களை நேரில் சென்று பார்ப்பதன் மூலம் அவர்களிடம் அன்பு மற்றும் மகிழ்ச்சியை நாம் பரப்பலாம்.

இதுபோன்ற வசதி குறைந்த மக்களுக்கு அன்பு மற்றும் நம்பிக்கையை அளிப்பதன் மூலம் தீபாவளியின் சாராம்சத்தை நாம் அனுபவிக்க முடியும். தீபாவளியின் வெற்றி இருளை நீக்கி ஒளியைப் பரப்புவதாகும்.

இந்த நன்னாளில் இவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் வாழ்வில் இறையருளைப் பெற்று இன்புற்று வாழ முடியும் என்று குணராஜ் குறிப்பிட்டார்