கோலாலம்பூர், நவ.9-
அர்மாடா நிதி மோசடி, சொத்துகளை துஷ்பிரயோகப்படுத்துதல், நம்பிக்கை மோசடி என 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 7 ஆண்டு சிறை, வெ.1 கோடி அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 1 பிரம்படியும் விதிக்கப்படும் என்று அந்த முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதே போல் அர்மாடாவின் சொத்துடமைகளை துஷ்பிரயோகப்படுத்தியக் குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை, 1 பிரம்படியும் 2 நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு 4 ஆண்டு சிறை வெ.1 கோடி அபராதத்தையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஒருவேளை இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 30 வயதுடைய சைட் சாடிக்கிற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.




