spot_img
15.9 C
London
spot_img
Home சமூகம் உலுசிலாங்கூர் மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு கூடைகள்! கவுன்சிலர் புவனேஸ்வரன் வழங்கினார்

உலுசிலாங்கூர் மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு கூடைகள்! கவுன்சிலர் புவனேஸ்வரன் வழங்கினார்

0
198

உலு சிலாங்கூர், நவ.9-
தீபாவளி அனைவரும் இணைந்து ஒற்றுமையாய் கொண்டாடும் ஓர் உன்னத பண்டிகையாகும். இத்தகைய பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டும்.

அவ்வகையில் தாம் பணியாற்றிவரும் தொகுதியில் குறைந்த வருமானம் பெரும் இந்தியர்களும் இந்த தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடிட வேண்டும். அத்தகைய உயரிய நோக்கத்துடன் உலுசிலாங்கூர் பத்தாங் காலி தொகுதி மக்களுக்கு உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் ப.புவனேஸ்வரன் தீபாவளி சிறப்பு அன்பளிப்புக் கூடைகள் எடுத்து வழங்கினார்.

தாம் சேவையாற்றிவரும் இந்தத் தொகுதியில் வசதி குறைந்தவர்களின் பட்டியலைத் திரட்டி அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அன்பளிப்பு கூடைகளை அவர் வழங்கி வருகிறார்.

இதுவரை சுமார் 250 அன்பளிப்புக் கூடைகள் வழங்கியிருப்பதாகவும் மேலும் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாயிருப்பதால் அவர்களுக்கும் அன்பளிப்புக் கூடைகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் புவனேஸ்வரன் கூறினார்.

“15 ஆண்டுகள் பத்திரிகை துறையில் பணியாற்றியபோது சாமானிய மக்களோடு பய ணித்திருக்கிறேன். அவர்களின் சுமைகளும் சிரமங்களும் நன்கு அறிந்திருக்கிறேன். இன்று அவர்களுக்காக கவுன்சிலராக சேவையை வழங்கி கொண்டிருப்பது மனம் நிறைவை கொடுக்கிறது. எனது இந்த சேவைகள் மக்களுக்காக என்றென்றும் தொடரும்” என்றார் அவர்.

இந்த அன்பளிப்பு கூடைகள் வழங்குவதற்கு தமக்கு பெரும் உருதுணையாக இருந்த பி.கே.ஆர். உலுசிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், பிரதமர் துறை இலாகா, மனிதவள அமைச்சர் வ.சிவகுமார், டிரா மலேசியா ஆகிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.