spot_img
20.9 C
London
spot_img
Home சமூகம் 3ஆர் திட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவீர்! -ஙா கோர் மிங் வலியுறுத்து

3ஆர் திட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவீர்! -ஙா கோர் மிங் வலியுறுத்து

0
332

கோலாலம்பூர், நவ.17-

2023 தேசிய மறுசுழற்சி தினம் (எச்.கே.எஸ்.கே.) என்பது சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்காக கழிவுகள் வீசப்படுவதைக் குறைத்தல், மறு பயனீடு மற்றும் மறுசுழற்சி ஆகிய 3ஆர் திட்டத்தை மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதற்கான வலியுறுத்தல் ஆகும் என்று ஊராட்சி மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஙா கோர் மிங் தெரிவித்தார்.

   இந்த 3ஆர் திட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்  என்று கூறுவதற்குக் காரணம் கழிவுகளை நிர்வகிப்பது அரசு நிறுவனத்தை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக வருங்காலத் தலைமுறையினருக்காக பூமியைத் தொடர்ந்து பராமரிக்க மக்களின் கடமையும் ஆகும்.

   இந்நாட்டில் குவியும் கழிவுகளின் தரவுப்படி குப்பைக் கொட்டும் இடத்தில்  ஒவ்வொரு நாளும் 38,259 டன் குப்பைகள் வீசப்படுகின்றன. அவற்றில் உணவுக் கழிவுகள் (44.5%), நெகிழிக் கழிவுகள் (13.2%), தாள் (8.5%), இரும்பு (2.7%), கண்ணாடி (3.3%), இதரக் கழிவுகள் (2.78%) ஆகும்.

   நாம் நடைமுறை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டும் போதாது, மாறாக உறுதிப்பாடும் இருக்க வேண்டியது அவசியமாகும். மறுசுழற்சி பற்றி உங்களுக்குத் தெரிந்தும்  நீங்கள் முறையாக மேற்கொள்வதில்லை. ஒருவருக்கு இதுபற்றிய முக்கியத்துவம் தெரிந்து அதை அவரே சுயமாக மேற்கொள்வதுதான் முக்கியமாகும் என்று தேசிய மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்றச் சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.