spot_img
14.2 C
London
spot_img
Home சமூகம் டோல் நெடுஞ்சாலை முழுவதும் ...

டோல் நெடுஞ்சாலை முழுவதும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான 40 பாதுகாப்பு இடங்கள்!

0
194

கோலாலம்பூர், டிச.7-

    பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிச் செய்யும் பொருட்டு பொதுச்சேவைத் துறையின் சேவைத் தரம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் கடப்பாட்டை பொதுப்பணித் துறை அமைச்சும் மலேசிய நெடுஞ்சாலை வாரியமும் (எல்.எல்.எம்.) கொண்டுள்ளன.

   மடானி அரசின் பிதாரா திட்டத்தின் முயற்சியை நிறைவேற்றும் வகையில் அமைச்சு, எல்.எல்.எம்., நெடுஞ்சாலைக் ஒப்பந்த நிறுவனங்கள் ஆகியவை நெடுஞ்சாலை முழுவதும் செயல்படுத்தக்கூடிய கட்டமைப்புகள் அனைத்து வகைப் பயனர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை ஏற்படுத்துவதை  உறுதிப்படுத்தும்.

   நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கானப் பாதுகாப்பு இடங்களை அதிகரிப்பது மடானி பிதாரா திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும். மோசமான வானிலையில் இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சியே இது.

   இதன் அடிப்படையில் நெடுஞ்சாலை முழுவதும் நிர்மாணிக்கப்படும் கட்டமைப்புகள் அனைத்து வகைப் பயனர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியாக இருப்பதை அமைச்சு, எல்.எல்.எம். மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்தும். அந்த வகையில் 2023-2024ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான பாதுகாப்பு இடங்களை அதிகரிக்க நெடுஞ்சாலை முழுவதும் 119 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கும் மடானி அரசின் திட்டத்திற்கேற்ப இந்த பாதுகாப்பு இடங்களை அதிகரிக்கும் முயற்சி 2023இன் 3ஆம் காலாண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. இதில் 40 இடங்களை நிர்மாணிக்கும் இலக்கு எல்.எல்.எம். கீழுள்ள ஒப்பந்த நிறுவனங்களின் உறுதிப்பாட்டில் 5 மாதத்திலேயே அடையப்பட்டு விட்டது. இதில் 2024ஆம் ஆண்டில் இதர 79 இடங்களில் பணியை மேற்கொள்வதற்கான முயற்சி இப்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    மோட்டார் சைக்கிளோட்டிகளுக்காக உறுதியளிக்கப்பட்ட 40 இடங்களை நிர்மாணித்ததன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி, எல்.எல்.எம். தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹஸ்னொல் ஸாம் ஸாம் ஹாஜி அகமட், எல்.எல்.எம். தலைமை இயக்குநர் பொறியியலாளர் டத்தோ ஸக்காரியா அகமட் ஸபிடி, மலேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்கள் சங்கத் (பி.எஸ்.கே.எல்.எம்.) தலைவர் புவான் வான் சல்வானி வான் யூசோப், நியூ பந்தாய் எக்ஸ்பிரஸ்வே சென். பெர். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அமைச்சு, எல்.எல்.எம்., பி.எஸ்.கே.எல்.எம். மூத்த அதிகாரிகள், நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் ஆகியவை பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 11ஆவது கிலோ மீட்டரிலுள்ள பகுதிக்கு வருகை மேற்கொண்டனர்.