புத்ராஜெயா, டிச.14-
அண்மைய காலமாக கோவிட் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஊக்கத் தடுப்பூசி நோய்த் தடுப்புத் திட்ட அமலாக்கத்திற்கான உத்தரவை அரசு வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
இது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஆகும்.
இருந்த போதிலும் தற்போது நடப்பில் போதுமான அளவு கையிருப்பில் இருக்கக்கூடிய மற்றும் இன்னும் காலாவதியாகாதத் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும். இது மாற்றுத் தொற்றுநோய்கள் மற்றும் புதிய நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை ஊக்கத் தடுப்பூசிச் செலுத்துவதற்கான உத்தரவை இன்னும் குறுகிய காலத்தில் அமைச்சு வெளியிடக்கூடும்.
முதியோர், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட எளிதில் நோய் தொற்றுபவர்களைப் பாதுகாக்க ஊக்கத் தடுப்பூசி மிகவும் அவசியமாகும்.
தற்போது நம்மிடம் இருக்கும் தடுப்பூசிகளால் எந்த புதிய வகை கோவிட்டிலிருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்க முடியும் என்று அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது டாக்டர் ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.
-மலேசியா கினி


