spot_img
20.2 C
London
spot_img
Home சமூகம் புதிய அமைச்சரவையில் தமிழ் படிக்க தெரிந்த அமைச்சர் இல்லாதது வருத்தமளிக்கிறது! ...

புதிய அமைச்சரவையில் தமிழ் படிக்க தெரிந்த அமைச்சர் இல்லாதது வருத்தமளிக்கிறது! -அருள்செல்வம்

0
333

பெட்டாலிங் ஜெயா, டிச.14-

தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கும் 2 விவகாரங்களுக்கு இடையிலான ஒற்றுமையைப் பார்க்கும் போது இந்நாட்டில் வேரூன்றி இருக்கும் இனம் சார்ந்த அரசியலைத்தான் வெளிப்படையாகக் காண முடிகிறது என்று பி.எஸ்.எம். கட்சித் துணைத் தலைவர், எஸ்.அருள்செல்வம் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக மலாய்க்காரர் அல்லாதவர் வர வேண்டும், புதிய அமைச்சரவையில் தமிழ் படிக்கத் தெரிந்த தலைவர்கள் பற்றாக்குறை குறித்து ஜ.செ.க. மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அருட்செல்வன் கருத்துரைத்தார்.

இவ்விரு விவகாரங்களும் உண்மையில் தங்களின் சொந்த இனங்கள் மட்டுமே தங்களைப் பாதுகாக்கும் என்பதைத்தான் காட்டுகின்றன.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளாக பிறகு இவ்வாறு நிகழ்வது மிகவும் வருத்தமளிக்கிறது. நாம் வழக்கம் போல பிரிந்துதான் இருக்கிறோம் என்று மலேசியா கினியிடம் அருள்செல்வம் குறிப்பிட்டார்.

-மலேசியா கினி