spot_img
14.6 C
London
spot_img
Home சமூகம் 1,000திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீபாவளி & கிறிஸ்துமஸ் உபசரிப்பு!

1,000திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீபாவளி & கிறிஸ்துமஸ் உபசரிப்பு!

0
452

கோலாலம்பூர், டிச.21

தலைநகர்,  பண்டார் பாரு செந்தூல், ஸ்ரீ பேராக் வளாகத்தில் நடைபெற்ற  தீபாவளி  மற்றும்  கிறிஸ்துமஸ் உபசரிப்பு நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,000திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் சிறப்பு வருகை புரிந்த இந்நிகழ்ச்சியில் மலாய்க்காரர், சீனர் மற்றும் இந்தியர் என பல்லின மக்கள் கலந்து கொண்டனர்.

வந்திருந்தோரை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்ச்சி, நடனம், சாந்தா கிளாவுஸ், சிலம்பம், உருமி மேளம் ,  அதிர்ஷ்ட குலுக்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பத்து நாடாளுமன்ற கூட்டரசு பிரதேச மக்கள் பிரதிநிதி மன்றத்தின் (சப் சோன் 1 பத்து) துணைத் தலைவர் கைருல் ஃபாடில் சுலைமான் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

 ஸ்ரீ பேராக்  குடியிருப்பு பகுதியில் முதன் முறையாக  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பொது உபசரிப்பு நிகழ்ச்சியின் வெற்றிக்கு   இக்குடியிருப்பாளர் பகுதி  இந்தியர் பிரிவு தலைவர் குணாளன் மற்றும் இளைஞர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் அனைவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பி 40 மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.