spot_img
12.2 C
London
spot_img
Home சமூகம் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடற்பயிற்சி!மாநகர்வாசிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் -என்றி லாய்

கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடற்பயிற்சி!மாநகர்வாசிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் -என்றி லாய்

0
514

கோலாலம்பூர், டிச. 23 –


வாழ்நாள் முழுமையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக கெஅடிலான வாங்சா மாஜூ தொகுதி தலைவர் என்றி லாய் இந்த கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தில் இவ்வட்டார பல்லின மக்களிடையே நல்லுறவை மேம்படுத்த உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்கினார்.

ஒவ்வொரு பண்டிகையின்போதும் இங்குள்ள தாசேக் டானாவ் கோத்தாவை இத்திட்டத்திற்காக இவர் பயன்படுத்துவது வழக்கம். அவ்வகையில் இன்று காலையில் நடத்தப்பட்ட இந்த உடற்பயிற்சி திட்டத்தில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் பங்கேற்றனர்.

இந்தப் பூங்காவில் கடந்தாண்டு முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு அப்பால் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர் ஏற்பாடு செய்த திட்டங்கள் ஸ்தாப்பாக், கோம்பாக் மற்றும் வங்சா மாஜூ மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

தவிர, இவ்வாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சுறுசுறுப்பை மேம்படுத்துவதோடு இதனை வழக்கமாக்கிக் கொள்ளும் இலக்கையும் கொண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மெருகூட்டும் பொருட்டு உள்ளூர் மக்கள் குழுவாகப் படைத்த ஆடல், பாடல்கள் போன்றவற்றோடு கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசு பொருட்கள், அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் களிப்பையும் ஏற்படுத்தியது.

சீனப்புத்தாண்டு தொடங்கி தீபாவளி மற்றும் தற்போது கிறிஸ்துமஸ் என தானும் தனது தோழிகளும் தாசேக் டானாவ் கோத்தாவில் கொண்டாட்டத்தைத் தவறியதில்லை என்கிறார் ‘கிறிஸ்மாரோபிக்’ ஏற்பாட்டாளரான ஜெசி சியோவ் விவரித்தார்.

“நானும் கிறிஸ்தவரான என்றி லாயும் உள்ளூர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார் ஜெசி சியோவ்.


“இதுபோன்ற திட்டத்தை நடத்த அதிக செலவு ஏற்படாது. ஆனால், முதியோர் இல்லங்களில் இருந்து இந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பெரும்பாலான முதியோர்களின் மனதிற்கு மனநிறைவைத் தந்ததைக் காண முடிகிறது ” என்றார்.

என்றி லாய் கோலாலம்பூர் மாநகர் மன்ற விளையாட்டு பிரிவு செயற்குழு துணைத் தலைவர் ஆவார். மக்களின் சுகாதார விவகாரத்தில் இவருக்கு இயல்பாகவே அதிக அக்கறை உண்டு.

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரிய உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல் இவ்வட்டார மக்களுக்காக இவர் அதிகமான திட்டங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.