ஷா ஆலம், டிச.26-
இங்கு நடைபெற்ற அபிநயா சேத்ரா நுண்கலாலயத்தின் ‘சிலம்பொலி 4’ சலங்கை பூஜை நிகழ்ச்சி மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டியின் சிறப்பு வருகை வழி பிரம்மாண்ட நிகழ்ச்சியாக உருமாற்றம் கண்டது.
இந்நிகழ்ச்சி ஷா ஆலம், செஷன்ஸ் 32, பெர்சியாரான் கெமுனிங் பிரிமா, கீ பெங் சீனப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அபிநயா சேத்ரா நுண்கலாலய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியில் இந்த மையத்தின் புரவலர் டத்தோஸ்ரீ என்.நவரத்தினம் மற்றும் இதர பொறுப்பாளர்களும் வருகை புரிந்தது மாணவிகளுக்கு உற்சாகத்தை ஊட்டியது என்றே சொல்ல வேண்டும்.
‘சிலம்பொலி 4’ சலங்கை பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் யாவினாகரன் த/பெ பிரபாகரன், திவாஷினி த/பெ திருமுருகன், அனிஷா த/பெ இந்திர குமார் , கிஷாந்தினி த/பெ இந்திர குமார் , ஹரினி மேனன்
த/பெ ரமேஷ் மேனன், ஐஸ்வர்யா மேனன் த/பெ ரமேஷ் மேனன், யமுனா தேவி த/பெ காளீஸ்வரன், சாஸ்வினி த/பெ சந்திர மோகன், காயத்ரி த/பெ இளங்கோவன் , தீபாஸ்ரீ த/பெ செல்வகுமார், ஷாமிரா த/பெ பிரகாஷ் மற்றும் சந்திர கலா த/பெ கேசவமூர்த்தி ஆகியோர் ஆவர்.


இவர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி வந்திருந்த கலை ஆர்வலர்களுக்கு கலை விருந்தாக அமைந்தது என்றால் மிகையாகாது.
அபிநயா சேத்ரா நுண்கலாலயத்தின் குரு ஸ்ரீமதி நா.விக்னேஸ்வரி சந்திர மோகன் ஆவார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மாணவ மணிகளுக்கு பரதம் கற்றுத் தருகிறார்.
ஈப்போ, தாப்பா, கோப்பெங் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் இவரின் பரத நாட்டிய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றின் வாயிலாக பரதம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உள்ள பல மாணவர்களின் ஆவலை நிறைவேற்றியதோடு நாட்டில் பரத கலை வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறார் ஸ்ரீமதி விக்னேஸ்வரி.




