spot_img
10.3 C
London
spot_img
Home சமூகம் மித்ராவை சட்டப்பூர்வ அமைப்பாக்குவீர்! -கணபதி ராவ் வலியுறுத்து

மித்ராவை சட்டப்பூர்வ அமைப்பாக்குவீர்! -கணபதி ராவ் வலியுறுத்து

0
397

பெட்டாலிங் ஜெயா, டிச.27-

   மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அதைச் சட்டப்பூர்வ அமைப்பாக்க வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் வலியுறுத்தினார்.

   மித்ரா ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இருந்து அதன் வாரியம் மற்றும் பிரதமரிடமும் நேரடியாக புகார் செய்யும்.

   தனது நிதி அறிக்கையை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் மித்ரா தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக்குவதால் தனக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டுத் தொகையை நிர்வகிப்பதில் இதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

   மித்ராவின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய சமூகத்தின் உயர்மட்டத் தலைவர்கள் அடங்கிய இந்த வாரியத்தால் கண்காணிக்கப்படும் என்று தமது முகநூலில் கணபதி ராவ் குறிப்பிட்டார்.