spot_img
9.6 C
London
spot_img
Home சமூகம் இன ஒற்றுமைக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகின்றது! -டத்தோ ஆரோன் அகோ

இன ஒற்றுமைக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகின்றது! -டத்தோ ஆரோன் அகோ

0
260

சுபாங் ஜெயா, பிப்.1-

  இந்நாட்டில் பல்லின மக்களை ஒன்றுபடுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு வரவேற்பதாக அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.

  இதில் தனியார் நிறுவனங்களின் ஈடுபாடு அரசுடனான உறவை வலுப்படுத்துவது மட்டுமின்றி அமைச்சு ஏற்பாடு செய்யக்கூடிய நிகழ்ச்சிகளைப் பிரபலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

  இவ்வாறான பல்லின மக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்ய விரும்பினால் அது ஒரு பெருநிறுவனத்தை உட்படுத்தியதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.  

  இதன் முக்கிய நோக்கம் பல்லின, சமய, கலாச்சார மக்களிடையே உறவை வலுப்படுத்தி ஒற்றுமையை உண்டாக்குவதற்கு ஆகும்.

  ஆதலால் தங்களின் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்தும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை அமைச்சு பெரிதும் வரவேற்கிறது. அவை அமைச்சின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்று யூ.எஸ்.ஜே மைடின் பேரங்காடியில் மைடின் பெருநாள் முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது கனொவிட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆரோன் குறிப்பிட்டார்.  

-மை மெட்ரோ