spot_img
9.6 C
London
spot_img
Home சமூகம் தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்காதீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்காதீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

0
337

சுபாங் ஜெயா, பிப்.2-

  தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமையாக இருப்பதோடு அதன் கையிருப்பு தொடர்ந்து முதன்மையாய் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணையத் (ஸ்பான்) தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.

   இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்பதால் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தீவிரமாகக் களமிறங்கி உள்ளது. அவற்றில் கிளந்தான் மாநிலத்திற்குப் பிரதமர் அறிவித்த பெரிய ஒதுக்கீட்டுத் தொகையும் அடங்கும்.

  “என்னைப் பொறுத்தவரை இதை அரசியலாக்கக் கூடாது, காரணம் தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமையாகும்” என்று நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

-எப்.எம்.டி