spot_img
9 C
London
spot_img
Home சமூகம் ‘நான் அமைச்சராக இருந்த காலத்தில் எச்ஆர்டி கோர்ப் வெ.220 கோடியை லெவி கட்டணமாக வசூலித்தது’ -சிவகுமார்...

‘நான் அமைச்சராக இருந்த காலத்தில் எச்ஆர்டி கோர்ப் வெ.220 கோடியை லெவி கட்டணமாக வசூலித்தது’ -சிவகுமார் பெருமிதம்

0
328

கோலாலம்பூர், பிப்.25-

தான் மனிதவள அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மனிதவள மேம்பாட்டுக் கழகம் (எச்.ஆர்.டி.கோர்ப்) கடந்தாண்டு 220 கோடி வெள்ளியை லெவி தொகையாக வசூலித்திருப்பதைக் கண்டு பெருமை அடைவதாக வ.சிவகுமார் தெரிவித்தார்.

“என்னுடைய தலைமைத்துவத்தில் கடந்த ஆண்டு சொக்சோ நிறுவனம் 1.8 பில்லியன் லாபத்தை ஈட்டியது” என்றார்.

“இப்போது எச்ஆர்டி கோர்ப் நிறுவனம் 220 கோடி வெள்ளியை லெவியாக வசூல் செய்திருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்”.

அதற்கு முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்ட தொகை 181 கோடி வெள்ளியாக மட்டுமே இருந்தது.

எச்.ஆர்.டி.கோர்ப் கடந்த 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் வசூலிக்கப்பட்ட தொகையில் மிக அதிகமானதாக இது விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு எச்.ஆர்.டி.கோர்ப். 178 கோடி வெள்ளி மதிப்பிலான நிதியுதவி மானியங்களை அங்கீகரித்துள்ளதோடு 22 லட்சம் பயிற்சித் திட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

எச்ஆர்டி கோர்ப் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அதன் தலைமைச் செயலாளர் டத்தோ வீரா சாகுல் ஹமீது, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் சொன்னார்.