spot_img
9.7 C
London
spot_img
Home சமூகம் பெர்னாமாவின் தலைமை ஆசிரியராக அருள்ராஜு துரைராஜ் நியமனம்

பெர்னாமாவின் தலைமை ஆசிரியராக அருள்ராஜு துரைராஜ் நியமனம்

0
290

கோலாலம்பூர், பிப்.27-

பெர்னாமாவின் தலைமை ஆசிரியராக அருள்ராஜு துரைராஜ், (வயது 55) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமது சேவையை பயிற்சிச் செய்தியாளராகக் கடந்த 1991ஆம் ஆண்டில் இவர் பெர்னாமாவில் தொடங்கினார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் கௌரவ இளங்கலை பட்டம் பெற்ற அருள்ராஜு, இதற்கு முன்பு செய்தி சேவைக்கான துணைத் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.

பெர்னாமாவில் இவரது பணி விளையாட்டுச் செய்தி பிரிவிலிருந்து தொடங்கியது. இவர் உள்நாட்டில், வெளிநாடுகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான செய்திகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, ஃபோர்மூலா ஒன் கார் பந்தயம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இளைஞர்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி, சீ விளையாட்டு போட்டி, தாமஸ் கிண்ணம், உலக ஓட்டப்பந்தய போட்டி ஆகியவை அடங்கும்.

கடந்த 2010ஆம் ஆண்டில் செய்திப் பிரிவு ஆசிரியராக நியமிக்கப்பட்ட அருள்ராஜு, தொடர்ந்து பெர்னாமா தொலைக்காட்சிக்கான ஒலிக்காட்சிச் சேவை பிரிவு ஆசிரியரானார்.

பொருளாதார செய்திகளுக்கான துணைத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தொலைக்காட்சி பிரிவு தலைவராக மற்றும் தொலைக்காட்சி, வானொலி ஒலி, ஒளிபரப்பு தலைவராகவும் இருந்துள்ளார்.

பெர்னாமாவில் சேவையாற்றிய காலம் முழுவதும் பிரதமரின் வெளிநாட்டு செய்தித் தொகுப்பு, ஐ.நா. பொதுக் கூட்டம், ஆசியான் உச்சநிலை மாநாடு, என்.ஏ.எம். உச்சநிலை மாநாடு ஆகியவற்றின் செய்திகளைத் தொகுத்தது மட்டுமின்றி ஆசிய பசிபிக் செய்தி நிறுவனங்களுக்கான அமைப்பு கூட்டத்திலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-பெரித்தா ஹாரியான்