பெட்டாலிங் ஜெயா, பிப்.28-
வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மின் கட்டணத்தில் விதிக்கப்படும் எஸ்.எஸ்.டி. உயர்வால் 85 விழுக்காட்டு பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று 2ஆவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அஜிஸான் தெரிவித்தார்.
இதில் 6 முதல் 8 விழுக்காடு வரையிலான வரி உயர்வு மணிக்கு 600 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சார பயன்பாட்டிற்கு உட்பட்டதாகும்.
இந்த வரி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சேவைக்கு விதிக்கப்படாது. இந்த மாற்றத்தினால் சேவைகளின் கட்டணம் திடீரென உயர்வு காணாது என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது பொருளாதாரத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தாது, காரணம் இந்த 2 விழுக்காடு வரி உயர்வு சில வரி விதிப்பு சேவைகளை மட்டுமே உட்படுத்தியதாகும் என்று அமீர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
-எப்.எம்.டி




