spot_img
11.3 C
London
spot_img
Home தேர்தல் கோல குபு பாரு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி!

கோல குபு பாரு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி!

0
275

உலு சிலாங்கூர், ஏப்.27-

கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளர் உட்பட 4 முனை போட்டி நிலவுகிறது.

இதில் இதர 3 வேட்பாளர்கள் பக்காத்தான், பெரிக்காத்தான், மலேசிய இந்திய மக்கள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாவர்.

ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சரின் பத்திரிகை செயலாளர் பாங் சொக் தாவ்வை வேட்பாளராக பக்காத்தான் நியமித்துள்ள வேளையில், உலு சிலாங்கூர் பெர்சத்து தொகுதியின் இடைக்கால தலைவர் கைருல் அஸாரி சாஉட் பெரிக்காத்தானின் வேட்பாளராகவும் ஹாஃபிஸா ஸைனுடின் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்குகின்றனர். இதில் ஞாவ் கே யின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜ.செ.க.வின் லீ கீ ஹியோங், (வயது 58) புற்றுநோய் காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் வரும் மே மாதம் 11 தேதியை வாக்களிப்பு தினமாகவும் 7ஆம் தேதியைத் தொடக்கக்கட்ட வாக்களிப்பு தினமாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இத்தொகுதியில் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் சாதாரண வாக்காளர்கள் 39362 பேர், போலீஸ்காரர்கள் (625), இராணுவ வீரர்கள் (238), வெளிநாட்டில் வசிக்கும் 1 வாக்காளர் ஆகியோர் அடங்குவர்.  

-பெரித்தா ஹாரியான்