spot_img
10.3 C
London
spot_img
Home சமூகம் ஒற்றுமை அரசாங்கம்தான் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஒற்றுமை அரசாங்கம்தான் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

0
264

உலு சிலாங்கூர், மே 7-

ஒற்றுமை அரசாங்கம்தான் மக்களின் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் என்பதால் கோல குபு பாரு தொகுதி இந்தியர்கள் பக்காத்தான் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார் .

மாநில அரசாங்கத்தில் ஒரு பகுதியாக பெரிக்காத்தான் இல்லாதிருப்பதால் அதன் வேட்பாளர் கைருல் அஸாரி சாஉட் வென்றாலும் கூட அக்கட்சியால் சமூகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது.

“இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசாங்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்தான் உங்களுக்குத் தேவை. அதனால் வாக்காளர்கள் அரசாங்க வேட்பாளரை தேர்வு செய்வதுதான் மிகவும் சிறந்தது” என்று இங்கு செய்தியாளர்களிடம் பேசிய போது விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

-எஃப்.எம்.டி.