spot_img
10.7 C
London
spot_img
Home சமூகம் ஸ்ரீ கிளந்தான் அடுக்குமாடி பகுதி 3 அறைகள் கொண்ட வீடுகளாக தரம் உயர்த்தப்படும்! -நாடாளுமன்ற உறுப்பினர்...

ஸ்ரீ கிளந்தான் அடுக்குமாடி பகுதி 3 அறைகள் கொண்ட வீடுகளாக தரம் உயர்த்தப்படும்! -நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன்

0
283

கோலாலம்பூர், மே 25-

இங்குள்ள பண்டார் பாரு செந்தூல், ஸ்ரீ கிளந்தான் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி 3 அறைகள் கொண்ட வீடுகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கூறினார்.

பத்து நாடாளுமன்ற தொகுதியில் இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் என பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தேவைகள் அனைத்துயும் கருத்தில் கொண்டு நிறைவேற்றுவதே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது கடமையாகும் என்று பிரபாகரன் குறிப்பிட்டார்.

சாலைகள், ஆலயங்கள், பள்ளிவாசல், சீன ஆலயங்கள், பள்ளிகள் என பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றுக்குத் தீர்வு கண்டு மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்பதே தனது நோக்கமாகும் என்று அவர் சொன்னார்.

மக்கள் நலனைக் காப்பதே நாடாளுமன்ற உறுப்பினரின் தலையாய கடமையாகும். அவ்வகையில், மக்கள் தன்னிடம் முன்வைக்கும் பிரச்சனைகளை சுமூகமான முறையில் தீர்வு கண்டு அவர்களை நிம்மதி பெருமூச்சு விட செய்வதே தனது இலக்காகும் என்று இங்குள்ள பண்டார் பாரு செந்தூல் ஸ்ரீ பேரா அடுக்குமாடி குடியிருப்பு மண்டபத்தில் நடைபெற்ற இவ்வட்டார மக்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கெஅடிலான்  பத்து தொகுதி துணைத் தலைவர்  ஹாபிஸ், மகளிர் பிரிவு தலைவி ரோஷிதா, பண்டார் பாரு செந்தூல் கிளை துணைத் தலைவர் கைருல் பாசில் சுலைமான்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.