spot_img
10.1 C
London
spot_img
Home சமூகம் முதன்மை எல்லை பாதுகாப்பு கட்டுப்பாட்டு திட்டம் மேம்படுத்தப்படும்!

முதன்மை எல்லை பாதுகாப்பு கட்டுப்பாட்டு திட்டம் மேம்படுத்தப்படும்!

0
160

கோலாலம்பூர், ஜூன் 27-

மலேசிய எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக எல்லைப் பகுதி பாதுகாப்புக் கட்டுப்பாடு தொடர்பான முதன்மை திட்டம் ஒன்று மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முழுமையான முதன்மைத் திட்டம் தேசிய எல்லைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் இதர அரசாங்க நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

தேசிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அளவை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முதன்மைத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் எல்லைப் பாதுகாப்பு கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக வரையப்படும் இத்திட்டம் 5 எல்லைகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும். இதில் வடக்கு (பெர்லிஸ்-கெடா-பேரா), கிழக்கு (கிளாந்தான்-திரெங்கானு-பகாங்), தெற்கு (சிலாங்கூர்-நெகிரி செம்பிலான்-மலாக்கா-ஜோகூர்), சபா மற்றும் சரவா ஆகியவை ஆகும் என்று இந்தோனேசியா-சரவா எல்லைப் பகுதியில் பரவலாக நிகழும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் சம்பவங்களை முறியடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இடையிலான அதிகார வரம்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து மக்களவையில் மாஸ் காடிங்-பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மோர்டி பிமோய் எழுப்பிய கேள்விக்கு இணைய அகப்பக்கம் வாயிலாக வழங்கிய பதிலில் அமைச்சு குறிப்பிட்டது.

-பெர்னாமா