spot_img
15.4 C
London
spot_img
Home சமூகம் தந்தையர்களுக்கு மகுடம் சூட்டும் விழா! -மஇகா பண்டான் மகளிர் பிரிவு ஏற்பாடு

தந்தையர்களுக்கு மகுடம் சூட்டும் விழா! -மஇகா பண்டான் மகளிர் பிரிவு ஏற்பாடு

0
283

கோலாலம்பூர், ஜூலை 3-

குடும்ப சுமையை மனதில் ஏற்று பிள்ளைகளின் நலனே முக்கியம் என்று உழைக்கும் தந்தையர்களைச் சிறப்பிக்கும் வகையில் பண்டான் மஇகா தொகுதி மகளிர் பிரிவு அண்மையில் தந்தையர் தின விழாவிற்கு ஏற்பாடு செய்தது.

தந்தைமார்களின் தியாகம், பிள்ளைகளின் வளர்ச்சிக்காக அவர்கள் மேற்கொள்ளும் பல செயல்களை பிள்ளைகள் தெரிந்து கொள்வதற்கு இத்தகைய கொண்டாட்ட நிகழ்ச்சி மிக முக்கியம் என்றார் நிகழ்ச்சியில் பேசிய பாண்டான் மஇகா தொகுதித் தலைவர் ராஜமோகன்.

பாண்டான் மஇகா தொகுதி மகளிர் பிரிவின் தரணி போற்றும் தந்தையர் தின விழாவானது பிள்ளைகள் மத்தியில் தந்தையர்களின் மேன்மையை எடுத்துரைக்க வகை செய்துள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் அத்தொகுதியின் கிளைத் தலைவர்கள், துணைச் செயலாளர் மொ.கிருஷ்ணன், தாமான் கெஞ்சானா கிளைத் தலைவர் பிரபாகரன், இளைஞர் தலைவர் தர்வின், மகளிர் அணித் தலைவி கிருஷ்ணவேணி உட்பட மகளிர் அணியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அனிச்சல் வெட்டப்பட்டது. தொகுதித் தலைவர் ராஜமோகன் தந்தையர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.