spot_img
11.1 C
London
spot_img
Home சமூகம் மெட்ரிகுலேஷன் விவகாரம்: குளறுபடியான அறிக்கைகளை வெளியிடாதீர்! -டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்து

மெட்ரிகுலேஷன் விவகாரம்: குளறுபடியான அறிக்கைகளை வெளியிடாதீர்! -டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்து

0
205

கோலாலம்பூர், ஜூலை 6-

மெட்ரிகுலேஷன் கல்வி குறித்து அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ள இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் குளறுபடியான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

10ஏ மற்றும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஏக்களைப் பெறும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி கற்க தகுதி பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் குளறுபடியான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக பிகேஆர் துணை தலைமைச் செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

இந்த அரசு சார்பற்ற இயக்கங்களில் பெரும்பாலானவற்றுக்குப் பிரதமரின் அறிவிப்பு தொடர்பாக உண்மையில் எதுவும் புரியவில்லை என்றுதான் தெரிகிறது.

அதில் 10ஏ மற்றும் அதற்கும் மேலான ஏக்களைப் பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகத் தற்போதைய நடப்பு இட ஒதுக்கீட்டு முறை அகற்றப்படும் அல்லது மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பங்கேற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அர்த்தமாகாது என மலேசிய கினியிடம் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் விவரித்தார்.