கோலாலம்பூர், ஜூலை 7-
மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ரெங்கநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இப்பதவிக்குப் போட்டியிட்ட டத்தோ டி. மோகன் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
மஇகா உதவி தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
பல மணி நேரம் வாக்குகள் எண்ணப்பட்டு முதல் கட்டமாக உதவித் தலைவருக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
மஇகாவின் தேசியத் தலைவரும் தேர்தல் குழு தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அனுமதியுடன் டத்தோ செல்வ மூக்கையா இந்த முடிவை அறிவித்தார்.
இதில் உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ அசோஜன் 8,633 வாக்குகளை பெற்று முதல் நிலையில் இடம் பெற்றார்.
டத்தோ முருகையா 8,566 வாக்குகளும் டத்தோ நெல்சன் 8,338 வாக்குகளும் பெற்றனர்.
டத்தோ டி. மோகன் 8,280 வாக்குகளைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.





