spot_img
13.6 C
London
spot_img
Home சமூகம் டிஜிட்டல் உள்ளடக்கத் துறை முதலீடு வெ.1.6 பில்லியனாக உயர்வு! -கோபிந்த் சிங்

டிஜிட்டல் உள்ளடக்கத் துறை முதலீடு வெ.1.6 பில்லியனாக உயர்வு! -கோபிந்த் சிங்

0
159

கோலாலம்பூர், ஜூலை 10-

மலேசியாவில் டிஜிட்டல் உள்ளடக்கத் துறை முதலீடு வளர்ச்சி கண்டு வருகிறது. மலேசிய டிஜிட்டல் பொருளாதார அமைப்பின் டிஜிட்டல் மலேசியா திட்டத்தில் 2022இல் முதலீடு செய்யப்பட்ட 550 மில்லியன் வெள்ளி 2023ஆம் ஆண்டில் 1.6 பில்லியன் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டிருப்பதன் வழி இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதே ஆண்டில் இத்துறையில் உயர் வருமானம் கொண்ட 1,900க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டு காலமாக சில பெரிய அளவிலான ஸ்டுடியோக்களிடமிருந்து மலேசியா முதலீடுகளைக் கவர்ந்து வருகிறது. அவற்றில் மின்னணு கலைகள்/கோட்மாஸ்டர்ஸ் (2011), ஸ்ட்ரீம்லைன் ஸ்டூடியோஸ் (2015), பண்டாய் நாம்கோ (2017), பிளேஸ்டேஷன் ஸ்டூடியோஸ் (2019), லேரியன் ஸ்டூடியோஸ் (2019), வெச்சுவர்ஸ் (2022) ஆகியவை அடங்கும் என்றார்.

இந்நாட்டில் ஏராளமான விளையாட்டு மேம்பாட்டாளர்களை ஊக்குவிக்க அமைச்சு மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள் குறித்து நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் இவ்வாறு கருத்துரைத்தார்.

-பெர்னாமா