spot_img
13.6 C
London
spot_img
Home சமூகம் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையை அமைச்சு விரைவில் தொடங்கும்!

இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையை அமைச்சு விரைவில் தொடங்கும்!

0
192

 

கோலாலம்பூர், ஜூலை 10-

இணையத்தின் தீய விளைவுகள் குறித்து பள்ளி மற்றும் சமூக ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கையைத் தொடர்பு துறை அமைச்சு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இணைய பகடிவதை, ஆன்லைன் மோசடியினால் ஏற்படும் ஆபத்துகள், இணைய பாதுகாப்பு, சுய தரவுகளைப் பாதுகாக்கும் அணுகுமுறைகள் மற்றும் இணையம் மூலம் பெறப்படும் நன்மைகள் குறித்து விளக்கமளிப்பு வழங்குவதாகும் என்று அமைச்சர்  ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரை இத்திட்டத்தைப் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதன் மூலம் சமூக வலைத் தளங்களின் நன்மைகள், ஆபத்துகள் குறித்து சிறு வயதிலேயே சிறார்கள் தெரிந்து கொள்வார்கள். இதில் 13 வயதிற்குக் கீழ்ப்பட்டச் சிறார்களுக்குச் சமூக வலைத்தள கணக்கைத் திறப்பதற்கு அமைச்சு தடை விதித்துள்ளது”.

எனினும், பெரும்பாலானோருக்கு இது தெரியவில்லை என்று இங்குள்ள பங்சார் தேசிய பள்ளியைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசங்களை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாமி ஃபாட்சில் குறிப்பிட்டார்.