spot_img
13.6 C
London
spot_img
Home சமூகம் லண்டன் கம்பன் விழாவில் பேருரை ஆற்றுகிறார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்!

லண்டன் கம்பன் விழாவில் பேருரை ஆற்றுகிறார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்!

0
198

கோலாலம்பூர், ஜூலை 11-

பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம் இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் கம்பன் கழகங்களை நிறுவி கம்பன் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

அவ்வகையில் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அண்மையில் இலங்கையில் நடந்த கம்பன் விழாவில் சிறப்புப் பிரமுகராகச் சென்று பேருரை ஆற்றி வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

அதனைத் தொடர்ந்து லண்டனில் நடக்கவிருக்கும் கம்பன் விழாவிற்கும் சிறப்புப் பிரமுகராக பேருரையாற்ற டத்தோஸ்ரீ எம்.சரவணன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலும் இலக்கியமும் ஆன்மீகமும் ஒரு சேர வாழ்ந்து வருபவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் . உலகத் தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஓர் அரசியல்வாதியாகவும், இலக்கியவாதியாகவும் வலம் வருகிறார் என்பதை நாம் மறுக்க இயலாது.

ஜுலை 13, 14ஆம் தேதிகளில் லண்டன் அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ லண்டன் செல்லவிருக்கிறார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மலேசிய மண்ணின் மணமும் வீசுகிறது என்பது நிதர்சனம். அது மலேசியர்களாகிய நமக்கும் பெருமை சேர்க்கும் .