பத்துமலை, ஜூலை 14-
தங்களின் ஆலய மேம்பாடு குறித்து சிலாங்கூர், சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலய நிர்வாகத்தினர் டிஎஸ்கே எனப்படும் டைனமிக் சினார் காசே சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்த ஆலயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலய நிர்வாகத்தினருடன் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள ஆலயங்களின் மேம்பாட்டில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் என்றும் கவனம் செலுத்தும் என்றும் இதன் அறங்காவலர்களில் ஒருவருமான சிவகுமார் குறிப்பிட்டார்.
இங்குள்ள பத்துமலை திருத்தல அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலய தலைவரின் பிரதிநிதி மணிமாறன் முனியாண்டி, ஆலோசகர் கார்மேகம் உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


