கோலாலம்பூர், ஜூலை 18-
ஆடை வடிவமைப்பு துறையில் ஆர்வமுள்ளவர்கள் பயனடையும் வகையில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி, நாளை 19.7.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடங்கி மாலை 6.00மணி வரை இங்குள்ள ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், முதல் மாடியில் அமைந்துள்ள கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்க அலுவலக கூட்ட அறையில் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் சங்க உறுப்பினர்களுக்கு 25 வெள்ளி கட்டணமும் உறுப்பினர்கள் அல்லாதோருக்கு 50 வெள்ளி கட்டணமும் விதிக்கப்படும்.
ஆடை வடிவமைப்பு துறையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பங்கேற்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கலாம் என்று இதன் பேச்சாளர்களில் ஒருவரான சண்முக செல்வி ராஜகோபால் குறிப்பிட்டார்.
https://forms.gle/B4QNkfiTmVR71d688 வழி பதிந்து கொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு சங்க செயலகத்துடன் 03-26931033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


