Homeமலேசியா'ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக்' வழி ரொக்கப் பரிசுகளை வெல்லலாம்!

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக்’ வழி ரொக்கப் பரிசுகளை வெல்லலாம்!

கோலாலம்பூர், ஜூலை 18-
‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’-இல் இணைந்து ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பெறலாம்.

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’ பற்றிய விபரங்கள்

  • 3 ஆகஸ்டு 2024 அன்று அண்டலாஸ் ஸ்போர்ட் காம்ப்ளெக்ஸ், கிள்ளானில் ஆஸ்ட்ரோ ஏற்பாடு செய்த ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன் எனும் வேடிக்கையான கால்பந்து போட்டியில் கால்பந்து ஆர்வலர்களான ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம். விசுவாசமான வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் ஆஸ்ட்ரோவின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க போட்டியாளர்கள் பின்வருபவற்றை மேற்கொள்ள வேண்டும்:
o இப்போது தொடங்கி 31 ஜூலை 2024, இரவு 11.59 மணி வரை ‘My Astro’ செயலியில் உள்ள வெகுமதிகள் (Rewards) பிரிவில் பதிவு செய்யவும்.
o அவர்களின் விவரங்களை நிரப்பத் தொடங்க ‘இப்போது மீட்டுக்கொள்ளுங்கள்’ (Redeem Now) என்பதைக் கிளிக் செய்யவும்.
o தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மட்டுமல்லாது தனியுரிமை அறிவிப்பை ஏற்கவும் அங்கீகரிக்கவும் வேண்டும்.
o பின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

  • 4 முதல் 5 உறுப்பினர்களைக் கொண்ட 32 குழுக்கள் ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன் போட்டியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவர்:
    o முதல் பரிசு: ரிம5,000 மற்றும் பதக்கம்
    o இரண்டாம் பரிசு: ரிம2,500 மற்றும் பதக்கம்
    o முன்றாம் பரிசு: ரிம1,500 மற்றும் பதக்கம்
    o நான்காம் பரிசு: ரிம1,000 மற்றும் பதக்கம்
  • அதிகம் பார்க்கப்பட்ட உள்ளூர் தமிழ் தொடரும் மலேசியாவின் 100 அத்தியாங்களைக் கொண்ட முதல் தமிழ் தொடருமானப் ​​‘பசங்க’ சீசன் 2 -இல் நடித்த பல்வேறு பிரபலமான உள்ளூர் திறமையாளர்கள்; முன்னாள் மலேசியக் கால்பந்து வீரர், சாபி சாலி; உள்ளூர் பிரபலங்களான ரூபன், ஹைகால் ஹைருடின்ஸ், ஜாக், ஜாஸ்பர்ஸ் மற்றும் தோமாத்தோ ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவர்.
  • மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
    ​
spot_img

latest articles

explore more