செலாயாங், ஜூலை 23-
2023 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வின் தேசிய ஒட்டுமொத்த சராசரி கிரேட் மதிப்பு (பிஎன்ஜிகே) 0.02 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
முந்தைய ஆண்டு 2.82 ஆக இருந்த பிஎன்ஜிகே கடந்தாண்டு ம2.84ஆக உயர்வு கண்டிருப்பதாக மலேசிய தேர்வு மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது இக் வான் தோரிமான் குறிப்பிட்டார் .
எஸ்டிபிஎம் மதிப்பீட்டு முறை 2013 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட 11 ஆண்டுகளில் தேசிய பிஎன்ஜிகேவின் சாதனை இதுவாகும் என்றார் அவர் .
“1,116 மாணவர்கள் அல்லது 2.70 விழுக்காட்டினர் பிஎன்ஜிகே 4.00 என முழு தேர்ச்சி நிலையைப் பெற்றனர். எனினும், 2022ஆம் ஆண்டு 1,184 ஆக இருந்த முழு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டு 1,116 ஆகக் குறைந்துள்ளது ” என்றார்.
“இந்த 1, 116 மாணவர்களில் 803 பேர் அல்லது 71.95 விழுக்காட்டினர் பி 40 பிரிவைச் சேர்ந்தவர்கள் ” என்று இங்கு பத்துமலை, பெர்சியாரான் சத்துவில் அமைந்துள்ள மலேசிய தேர்வு மன்ற பிரதான மண்டபத்தில் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோது குறிப்பிட்டார் .


