Homeசமூகம்பத்துமலைக்கான பிரதமரின் வருகை :இந்திய சமூகத்தின் மீதான அவரின் அக்கறையை பறைசாற்றுகிறது! டத்தோஸ்ரீ ரமணன்

பத்துமலைக்கான பிரதமரின் வருகை :இந்திய சமூகத்தின் மீதான அவரின் அக்கறையை பறைசாற்றுகிறது! டத்தோஸ்ரீ ரமணன்

பத்துமலை, பிப். 8-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று பத்துமலைக்கு மேற்கொண்ட வருகையானது இந்தியர்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையையேக் காட்டுகிறது என்று கூறப்பட்டது.

அடுத்த வாரம் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் நிலையில் இதன் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் இங்கு வருகை மேற்கொண்டார். இது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாட்டில் தைப்பூச கொண்டாட்டத்திற்கான தாய்க் கோவிலாக பத்துமலை திருத்தலம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பொருட்டு இந்தத் தைப்பூச திருவிழா ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டார்.

அவருடன் டத்தோஸ்ரீ ரமணன் உட்பட பல பிரமுகர்களும்  சென்றிருந்தனர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா பிரதமரை வரவேற்றதோடு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பித்தார்.

பத்துமலையைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்த ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கைகளை பிரதமர் கவனமாக செவிமடுத்ததாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, டிஜிட்டல் துறை அமைச்சர் கோவிந்த் சிங், மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

 

spot_img

latest articles

explore more