Homeசமூகம்வெள்ளி ரதம் திரும்பும்போது நடமாடும் கழிப்பறைகளை அமைப்பீர்! - சத்யா சுதாகரன் வேண்டுகோள்

வெள்ளி ரதம் திரும்பும்போது நடமாடும் கழிப்பறைகளை அமைப்பீர்! – சத்யா சுதாகரன் வேண்டுகோள்

கோலாலம்பூர், பிப். 12- பத்துமலை திருத்தலத்தில் இருந்து வெள்ளி ரதம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தாய்க் கோவிலை வந்தடைவதையொட்டி அதிகமான நடமாடும் கழிப்பறைகளை அமைக்கும்படி பிபிபி கட்சியின் விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளி ரதம் பத்துமலையில் இருந்து இன்று மாலை 4.00 மணியளவில் புறப்பட்டு நாளை அதிகாலை வேளையில் மாரியம்மன் கோவிலை வந்தடையும் என்று கூறப்படுகிறது.

இந்த ரத ஊர்வலத்தின்போது சாலை நெடுகிலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும் .

அர்ச்சனைகளும் நடைபெறும். இவ்வேளையில், பக்தர்களின் வசதிக்காக அதிகமான நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சத்யா சுதாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) கவனத்தில் கொண்டு தேவையான இடங்களில் நடமாடும் கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பத்துமலை திருத்தலத்தில் இருந்து14.2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர்.இவர்களுக்கு நடமாடும் கழிப்பறைகள் அவசியம் தேவைப்படுகின்றன.

காலம் தாழ்த்தாமல் இந்த விவகாரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் விரைந்து செயல்பட வேண்டும். விலாயா மாநில அமைச்சருடன் பணியாற்றி வரும் இந்திய அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி பக்தர்களுக்கு உதவிட வேண்டும் என்று சுதாகரன் கேட்டுக்கொண்டார்.

 

spot_img

latest articles

explore more