Homeசமூகம்விரிவான விசாரணை நடத்துவீர்!  எம்சிஎம்சிவிற்கு அமைச்சர் ஃபாமி உத்தரவு

விரிவான விசாரணை நடத்துவீர்!  எம்சிஎம்சிவிற்கு அமைச்சர் ஃபாமி உத்தரவு

கோலாலம்பூர், மார்ச் 4-காணொளியில் காவடி ஆட்டத்தைக் கேலி செய்து இந்துக்களின் சமய நம்பிக்கை இழிவுபடுத்தப்பட்ட செயல் நாட்டிலுள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் ஆஸ்ரோவிற்குச் சொந்தமான எரா எஃப் எம் வானொலி நிலைய ஊழியர்கள் மீது முழு விசாரணை நடத்தும்படி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக விரிவாக விசாரணை செய்யும்படி தாம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃ பாட்சில் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

“எம்சிஎம்சி தலைமையகத்திற்கு வருமாறு ஆஸ்ட்ரோ மற்றும் சம்பந்தப்பட்ட வானொலி நிலைய நிர்வாகத்தை அழைப்பது உட்பட விரிவான விசாரணையை நடத்தும்படி இந்த ஆணையத்தை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார் ஃபாமி .

நடப்பு விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இதன் வழி உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 

 

spot_img

latest articles

explore more