Homeசமூகம்ஜம்ரி வினோத் போன்ற அறிவற்றவர்களை சோஸ்மா  கீழ்  கைது செய்வீர்! டத்தோஸ்ரீ சரவணன் 

ஜம்ரி வினோத் போன்ற அறிவற்றவர்களை சோஸ்மா  கீழ்  கைது செய்வீர்! டத்தோஸ்ரீ சரவணன் 

கோலாலம்பூர், மார்ச் 6-இந்து  சமயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும்  ஜம்ரி வினோத் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலுவான கோரிக்கையை அரசாங்கத்திடம்  முன் வைத்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் மதம் என்ற நம்பிக்கையில் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து மதம் ஒரு புனிதமான மதம். உலகத்திலேயே தொன்மையான ஒரு மதமும் கூட.

இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட நமது மதத்தை இழிவுபடுத்தி வரும் ஜம்ரி வினோத் மீது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமய இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றார்.

“இந்து சமயத்தின் ஆழமும், அர்த்தமும் தெரியாவிட்டால் அது அவரின் பிரச்சினை. இந்து சமயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களுடன் பொது விவாதம் நடத்தத் தயார்”என்று ஜம்ரி வினோத்திடம் சவால் விடுத்தார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

இறையாண்மை, ஒற்றுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்ரி வினோத் மீது அரசாங்கம் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் இப்போதைய அரசாங்கம் இந்துக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று சரவணன் எச்சரிக்கை விடுத்தார்.

“இவ்விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். இதன் தொடர்பில் விசாரணை செய்ய பணித்திருப்பதாக அமைச்சர் என்னிடம்  கூறினார் ” என்றார் சரவணன்.

 

 

 

 

spot_img

latest articles

explore more