Homeசமூகம்தென் தாய்லாந்து செல்வதை தவிர்ப்பீர்! மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து

தென் தாய்லாந்து செல்வதை தவிர்ப்பீர்! மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 9-தென் தாய்லாந்து யாலா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா ஆலோசனை கூறியுள்ளது.

சுங்கை ஜோலோக் மாவட்ட அலுவலகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு சாவடியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறைந்தது இரு பாதுகாப்பு பணியாளர்கள் கொல்லப்பட்ட வேளையில் எண்மர் காயமுற்றனர்.

இச்சம்பவத்தில் மலேசியர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமது யூசோப் மாமாட் தெரிவித்தார்.

சொங்கலாவில் உள்ள மலேசிய தூதரகம் வாயிலாக உள்துறை அமைச்சு யாலா, நராதிவாட் மற்றும் பட்டாணி ஆகிய பகுதிகளில் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

தங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சொங்கலாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களைப் பதிந்து கொள்ளும்படி இப்பகுதியில் வசிக்கும் மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தூதரகத்துடன் 6674 311 062, 6674 316 274 அல்லது அவசர அழைப்புக்கு 6693 657 0707 ஆகிய எண்களில் மலேசியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

-எஃப்எம்டி

 

 

 

spot_img

latest articles

explore more