Homeசமூகம்ஜம்ரி வினோத்தை உடனடியாக கைது செய்வீர்! பாப்பா ராய்டு கோரிக்கை

ஜம்ரி வினோத்தை உடனடியாக கைது செய்வீர்! பாப்பா ராய்டு கோரிக்கை

 

ஷா ஆலம், மார்ச் 8-நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பிற சமயத்தைக் கேலி செய்து வரும் ஜம்ரி வினோத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.

மற்ற சமயங்களை இழிவுபடுத்தும் செயலை ஜம்ரி வினோத் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினரான பாப்பாராய்டு வலியுறுத்தினார்.

பல்லின மற்றும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்நாட்டில் இந்து சமயத்தைத் தொடர்ந்து கேலி செய்து வரும் இவரின் செயல் மக்களிடையிலான ஒற்றுமையைக் குலைக்கவல்லது என்றார்.

ஆகையால், இவரின் இதுபோன்ற நடவடிக்கை இனியும் தொடராதிருக்க அரசாங்கம் இவருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிற இனத்தவரின் உணர்வுகளைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்க்காத ஜம்ரி வினோத்தின் செயல் அவரின் முதிர்ச்சியற்ற தன்மையையேக் காட்டுகிறது என்றார் பாப்பாராய்டு.

 

 

 

spot_img

latest articles

explore more