Homeசமூகம்மத வெறுப்பைத் தூண்டுபவர்கள் மீது சட்டம் பாய வேண்டும் ! - அமைச்சர் கோபிந் சிங்...

மத வெறுப்பைத் தூண்டுபவர்கள் மீது சட்டம் பாய வேண்டும் ! – அமைச்சர் கோபிந் சிங் டியோ 

கோலாலம்பூர், மார்ச் 10- இன வெறுப்பைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் மீண்டும் வலியுறுத்தினார்.

பிற மதத்தை அவமதிப்பதை அறவே மன்னிக்க முடியாது. அதோடு, பிற மதத்தை அவமதிப்பவர்கள் அதற்கான விளைவை கட்டாயம் சந்திக்க வேண்டும். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அறிக்கை ஒன்றின் வழி வலியுறுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) அன்று அமைச்சரவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாகவும் இதுபோன்ற விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

தகவல் அமைச்சர் டத்தோ பாஃஹ்மி பட்சில் இதே நாளில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது இந்த சர்ச்சையின் அவசரத்தை புலப்படுத்தியது.

இவ்விவகாரம் தொடர்பில் காவல்துறையில் பல புகார்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

சிலர் வேண்டுமென்றே இதே சர்ச்சையை மீண்டும் மீண்டும் எழுப்புவதை நாம் காண்கிறோம், இது நிலைமையை மேலும் சிக்கலாக்குவதோடு, பலரைச் சினமடையச் செய்கிறது. ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று கோவிந் சிங் கேட்டுக் கொண்டார்.

பிற மதத்தை அவமதிக்கும் இது போன்ற பதிவுகளையும் அறிக்கைகளையும் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றார் அவர். அவர்கள் மீது உடனடியாக சட்டம் பாய வேண்டும்.

இதுபோன்ற சர்ச்சையை சமாளிக்க சட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகள் அமல்படுத்தப்படாவிட்டால் அவை அர்த்தமற்றவையாகிவிடும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 

spot_img

latest articles

explore more