ஜாசின், மார்ச் 10-மலாக்கா, ஜாசின், சிம்பாங் கிராயோங் ஸ்ரீ மதுரை வீரன் ராஜா கருமாரியம்மன் துவா பெக் கொங் கோயில் (சிண்டியன் டெம்பள்) மற்றும் மஇகா செமாபோக் கிளை இணைந்து ஸ்ரீ மஹா சிவராத்திரி விழாவை அண்மையில் சிறப்பாக நடத்தியது.

விசேஷ பூஜைகள், அபிஷேகம், சிவன் போற்றிப் பாடல்கள் என சிவராத்திரி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மாணவர்களின் கைவண்ணமான வர்ணம் தீட்டும் போட்டி, மாறுவேடப் போட்டி, நிருத்தசமுட்றா பரதநாட்டியம் போன்றவை சிறப்பு அங்கமாக இடம் பெற்றன.


மாறுவேடப் போட்டியில் சிறார்கள் முப்பெருந்தேவிகள், சிவன் , முருகன் கடவுள்களின் வேடத்தைப் பூண்டு மிகச் சிறப்பாகத் தோற்றமளித்தனர்.

இந்நிகழ்வுக்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ வி.பி சண்முகம் சிறப்பு வருகை தந்தார்.

இவர் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பெற்றோர்களின் பங்கேற்பு இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

சிறார்கள் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்துவதற்கு நல்லதொரு அடித்தளத்தை இந்த சிவராத்திரி விழா ஏற்படுத்தித் தந்தது என்றால் மிகையாகாது.