Homeமலேசியாஇலவச நிர்வாகபயிற்சி: இந்திய வணிகர்களை மேம்படுத்தும் மற்றுமொரு திட்டம் !  -டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

இலவச நிர்வாகபயிற்சி: இந்திய வணிகர்களை மேம்படுத்தும் மற்றுமொரு திட்டம் !  -டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

கோலாலம்பூர், ஏப். 5-தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சு நாட்டிலுள்ள இந்தியர்களை மேம்படுத்தும் பொருட்டு ‘இந்திய தொழில் முனைவர்களை மேம்படுத்துதல்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தெக்குன் நேஷனல் ஒத்துழைப்பின்கீழ் இலவச நிர்வாக பயிற்சி வழங்குவதன் வழி இந்திய வர்த்தகர்களை மேம்படுத்த தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு இலக்கு வகுத்திருப்பதாக இதன் துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்திய வர்த்தக சமூகத்தினர் தங்கள் வர்த்தகத்தை முறையாகவும் திட்டமிட்டும் மேற்கொள்வதற்கு மடானி அரசாங்கம் முதன் முறையாக எடுத்துள்ள முயற்சி இதுவாகும் என்பதை துணையமைச்சர் சுட்டிக் காட்டினார். 

spot_img

latest articles

explore more